நோட் பண்ணிக்கோங்க.. இந்த நாளில் தங்கம் வாங்கினால்.. அதன் வரவு பன்மடங்கு அதிகரிக்கும்!!

Photo of author

By Gayathri

நாட்டு மக்கள் அனைவரும் அக்டோபர் 31 அன்று தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்த நாளில் தலைக்கு குளித்து புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.தீபாவளி பண்டிகையில் லட்சுமி தேவியின் அருள் பெற வீட்டை சுத்தம் செய்து வண்ண விளக்குகளால் அலங்கரிப்பதுண்டு.அதேபோல் தீபாவளி அன்று தங்கம் வாங்கினால் அதன் வரவு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

ஆனால் தீபாவளியை விட அதற்கு முந்தின நாளான இன்று தங்கம்,வெள்ளி வாங்க உகந்த நாளாகும்.இந்த நாளை தந்தேராஸ் என்று அழைப்பார்கள்.உடல் ஆரோக்கியத்துடன் செல்வ செழிப்புடன் வாழ இந்த தந்தேராஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்நாளில் தங்கம்,வெள்ளி,செம்பு போன்ற உலோகங்களை வாங்கினால் அதன் வரவு தடையின்றி அதிகரிக்கும்.

விஷணு பகவானின் அவதாரமான தன்வந்திரியை இந்நாளில் மக்கள் வழிபடுவார்கள்.தன்வந்திரி என்பது ஆயுர்வேதத்தின் கடவுள்.இந்நாளில் தன்வந்திரியை வாங்கினால் உடலில் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம் என்பது நம்பிக்கை.

அதேபோல் இந்நாளில் செல்வ வளத்தை பெருக்கும் லட்சுமி தேவியை வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்கும்.மகாலட்சுமி வடிவமான தங்கம்,வெள்ளி,செம்பு போன்ற உலோகங்களை வணங்கினால் அதன் வரவு அதிகரித்து செல்வ செழிப்புடன் வாழ வழிபிறக்கும்.அக்டோபர் 29 காலை 10:30 மணி முதல் அடுத்த நாள்
அக்டோபர் 30 ஆம் தேதி மதியம் 1:15 மணி வரை முகூர்த்த நாளாகும்.இந்நாளில் தங்களால் முடிந்த தங்கம்,வெள்ளி அல்லது செம்பு பொருட்களை வாங்கி வீட்டு பூஜை அறை அல்லது பணம் வைக்கும் இடத்தில் வைத்து வழிபட்டால் தனலாபம் உண்டாகும்.