கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கூடிய விரைவில் இது திருச்சியிலும் அமல்படுத்தப்படும்!
கரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது குறைந்துள்ளது.இவ்வாறு குறையும் நேரத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா என பலர் கல்வித் துறை அமைச்சரிடம் பலர் கேள்வி எழுப்பினார். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் கூறியது, பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் சுழற்சிமுறையில் வருவார் என மேலும் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை முதல்வர் வெளியிடுவார் என்று உரைத்தார். அதேபோல நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் அதிகாரப்பூர்வமாக ,சுழற்சிமுறையில் வழிகாட்டு நெறிமுறைகள் உடன் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என கூறினார்.
இதையடுத்து கல்வித்துறை அமைச்சர் இன்று திருச்சி மாவட்ட மைய நூலகம் சார்பில் சிறப்பாக பணியாற்றிய நூலகர்களுக்கு கேடயம் மற்றும் பட்டையும் வழங்கினார்.இந்த விழாவில் கலந்து கொண்ட கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியது. மதுரையில் அமைக்கப்பட்ட கலைஞர் நினைவு நூலகம் போல திருச்சியிலும் கூடியவிரைவில் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.மேலும் தற்போது அரசு பள்ளிகளில் கூடுதலாக மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.இது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக உள்ளது. இருப்பினும் கூடுதல் மாணவர் சேர்க்கையால் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட கூடும் என்றார்.
தற்பொழுது தமிழகத்தில் 37 ஆயிரத்து 679 அரசு பள்ளிகள் உள்ளன.இந்த பள்ளிகள் அனைத்திலும் கூடுதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று உள்ளது என கூறினார். அதுமட்டுமின்றி ஒரு பள்ளியில் 150 பேர் மட்டுமே படித்து வந்த மாணவர்கள் மத்தியில் தற்போது 350 பேர் பயிலும் நிலை வந்துள்ளது என்றார்.இதனால் கூடுதல் மாணவர் சேர்க்கை நடைபெற்ற இடங்களில் கூடுதல் ஆசிரியர்களில் நியமிப்பதற்கு மற்றும் பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுப்பதற்கும் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது என்றார். கூடுதலாக மாணவர் சேர்க்கை நடைபெற்று உள்ள பள்ளிகள் பற்றி முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.தற்பொழுது ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடந்து முடிந்த பிறகே புதிய ஆசிரியர் நியமனம் குறித்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார்.