கேரள சட்டசபையில் வீடியோ காட்சிகளை பகிர்ந்ததாக ஏழு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களுக்கு நோட்டீஸ்!!

Photo of author

By Savitha

கேரள சட்டசபையில் வீடியோ காட்சிகளை பகிர்ந்ததாக ஏழு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களுக்கு நோட்டீஸ்!!

கேரள மாநில சட்டமன்ற கூட்டத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் சேம்பரை முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்ட வீடியோ காட்சிகளை பிறருக்கு பகிர்ந்ததாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஏழு சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள, அதிக பாதுகாப்புடன் கூடிய பகுதியான சட்டமன்றத்தில் சட்ட விரோதமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து பிறருக்கு பகிர்ந்தது குறித்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த சித்திக், ரமா, முனீர், அணில் குமார், பஷீர் ஆபித் ஹுசைன் தங்கள் ஆகிய ஏழு எம்எல்ஏக்களின் உதவியாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நோட்டீஸ் கிடைக்கப்பெற்று 15 நாட்களுக்குள் சட்டசபைச் செயலாளருக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.