அலட்சியம் காட்டிய ஏர் இந்தியா!! விமான போக்குவரத்து இயக்குனரகம் எடுத்த அதிரடி முடிவு!

0
236

அலட்சியம் காட்டிய ஏர் இந்தியா!! விமான போக்குவரத்து இயக்குனரகம் எடுத்த அதிரடி முடிவு!

விமானத்தில் பயணிகளிடம் மோசமாக நடந்து கொண்டதாக கூறப்பட்ட இரு வேறு சம்பவங்களில் அலட்சியம் காட்டிய ஏர் இந்தியாவிற்கு விமான போக்குவரத்து கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 26 இல் நியூயார்க் நகரில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணி ஒருவர் கேபினின் விளக்குகள் அணைக்கப்பட்டவுடன் போதையுடன் அருகில் இருந்த பெண் மீது சிறுநீர் கழித்துள்ளார். அவரது உடை,காலனி மற்றும் பைகள் நனைந்துள்ளன. உடனே அவருக்கு வேறு உடைகள் வழங்கப்பட்டது. இதனை அடுத்து விமானம் டில்லியில் தரையிறங்கியது. பாதிக்கப்பட்ட பெண் போதை ஆசாமி மீது விமான நிலையத்தில் புகார் கொடுத்தும் சிறுநீர் விவகாரத்தில் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அதிகாரிகள் அவரை போக விட்டதாக அந்தப் பெண் புகார் தெரிவித்து இருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளானதை அடுத்து போலீசார் சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா என்ற நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் பிரான்சிலிருந்து டெல்லி வந்த மற்றொரு இந்தியா விமானத்திலும் இதேபோன்று நடந்த சிறுநீர் கழித்த விவகாரம் எவ்வித நடவடிக்கையும் இன்றி அலட்சியம் காட்டப்பட்டது.

இதை கண்டித்து இரு வேறு சம்பவங்களில் நடவடிக்கை இன்றி மிகவும் மோசமாக செயல்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு விமான போக்குவரத்து இயக்குனர் ரகம் நோட்டீசை அனுப்பி உள்ளது.

Previous articleபொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்குவதில் புதிய உத்தரவு!! தமிழக அரசின் திடீர் நடவடிக்கை!!
Next articleஇந்தச் செடியை கண்டால் விட்டுவிடாதீர்கள்!! உச்சி முதல் பாதம் வரையுள்ள அனைத்து நோய்களுக்கும் இந்த ஒரு செடியை போதும்!