விரிவான அறிக்கை கேட்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!

Photo of author

By Hasini

விரிவான அறிக்கை கேட்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!

திருவண்ணாமலையில் மாற்று திறனாளி பெண் ஒருவர் ஐந்து மாதங்களுக்கு முன் அதே ஊரை சேர்ந்த ஒரு நபரால் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானார்.

இது குறித்து பெண்ணின் தந்தை திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிதிருந்தார்.அதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவரை போலீசார் உடனே கைது செய்தனர்.இந்த நிலையில் பாதிக்கபட்ட பெண்ணிற்கு தேவையான மருத்துவம், சட்டம், காவல்துறை, உளவியல் சார்ந்த உதவிகள் கிடைக்கப்பெற்றதா எனவும், இச்சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாற்று திறனாளிகள் நல ஆணைய மாநில ஆணையர், ஜானிடாம் வர்கீஸ் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, திருவண்ணாமலை வருவாய் கோட்டாசியர், மாவட்ட சமூக நல அலுவலர், ஆகியோரிடம் விரிவான அறிக்கை கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

மேலும் விரிவான அறிக்கையை வரும் 4 ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் மாற்று திறனாளிக்கான உரிமை சட்டத்தின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்க ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது எனவும் கூறியுள்ளார்.