முழு கட்டணம் வசூல்; 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ்..! அமைச்சர் செங்கோட்டையன்

0
212

கொரோனா காலத்தில் முழு கல்வி கட்டணம் வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆன்லைனில் பள்ளி, கல்லூரிகளுக்கு வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தனியார் பள்ளிகள், கல்வி கட்டணத்தை முழுவதுமாக வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா காலத்தில் முழு கல்வி கட்டணம் வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கொரோனா நிலவரம் குறித்த ஆய்வுக்கு பிறகே பெற்றோர், மாணவர் மனநிலை அறிந்து பள்ளிகள் திறக்கப்படும். செப்டம்பர் 21 முதல் 25 வரை ஆன்லைன் வகுப்பு நடத்த கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

Previous articleஇந்தியாவில் புதிதாக 97,894 பேருக்கு கொரோனா; 1,132 பேர் உயிரிழப்பு!
Next articleதிமுகவில் இணைந்த அதிமுக அமைச்சரின் உறவினர்!புதிர் போடும் அரசியல் களம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here