தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! இவர்கள் அனைவரும் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்!

Photo of author

By Parthipan K

தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! இவர்கள் அனைவரும் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்!

Parthipan K

Notification issued by Tamil Nadu Electricity Board! All of them need to match Aadhaar number with electricity connection!

தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! இவர்கள் அனைவரும் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்!

தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள 2.36 கோடி மின் நுகர்வோர்கள் 21 லட்சம் விவசாய இணைப்புகள், 100 யூனிட்கள் இலவசமாக பெறும் மக்கள் மற்றும் கைத்தறி ,விசைத்தறி தொழிலாளர்கள் போன்றவர்கள் பெரும் மானியத்தை தொடர்ந்து பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

முன்னதாகவே மின்சார வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி விரைவில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான இணைய இணைப்பை மின்வாரியம் வெளியிடும் என்று தெரிவித்திருந்தார்.அந்த வகையில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான இணைய இணைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

முதலில் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுபவர்கள் ,குடிசை வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் கைத்தறி நுகர்வோர்கள் என மானியம் பெறும் அனைவரும் தங்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.அதனையடுத்து தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத நிறுவனங்கள் ஆதார் இணைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.