தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த இரண்டு மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை!
தற்போது ஊரக வளர்ச்சித் துறையின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் தற்போது அரியலூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள பணிக்கு மொத்தம் 20 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் மற்றும் தகுதி வாய்ந்தோர் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
இதற்கான கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு 28 வயதிற்குள் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.12,000, இந்தப் பணிக்கான தேர்வு: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தங்களுடைய விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து அந்த விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
அரியலூர் மாவட்டத்திற்கு அனுப்ப வேண்டிய அஞ்சல் விவரம். திட்ட இயக்குனர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட ஆட்சி. அரியலூர் 621704.கரூர் மாவட்டத்திற்கு அனுப்ப வேண்டிய அஞ்சல் விவரம். திட்ட இயக்குனர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட ஆட்சி கரூர். விண்ணப்பிக்க கடைசி தேதி :அரியலூர் மாவட்டத்திற்கு இந்த மாதம் 30.09.2022 ஆகும். விண்ணப்பிக்க கடைசி தேதி கரூர் மாவட்டத்திற்கு இந்த மாதம் 26.09.2022 ஆகும். மேலும் விவரங்களை இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.