தமிழகத்தில் குறைந்தது வரும் கொரோனா பரவல்!

0
158

தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,481 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 7,29,507 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்று காரணமாக 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் 11,183 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை 6,98,820 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்றைய தேதியில் 19,504 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 70,297 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 1,00,99,519 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை 2,01,195 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போதைய நிலையில் அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 137 என மொத்தம் 203 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

Previous articleதமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!! மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!
Next articleயாருடன் கூட்டணி! முக்கிய முடிவை அறிவித்தார் கமலஹாசன்!