மதுப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி மதுபான கடைகள் அனைத்தும் 11 மணி வரை செயல்படும்!!
நாடாளுமன்ற தேர்தலானது தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றதால் தேர்தல் நடத்த விதைகள் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டது.குறிப்பாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மதுபான கடைகள் இரவு 10 மணிக்கு மேல் இயங்க கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
தற்பொழுது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து விட்டதால் மீண்டும் பழைய நேரத்திற்கே மதுபான கடைகள் இயங்க வேண்டும் என கடை உரிமையாளர்கள் கலால்த்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து கலால் துறை அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திடம், நாடளுமன்ற தேர்தலுக்கு முன் மதுபான கடைகள் அனைத்தும் இரவு 11 மணி வரை செயல்பட்டு வந்தது.
தேர்தல் நடத்தை விதிகளால் அனைத்து கடைகளும் 11 மணிக்கு முன்பே மூடும் படி உத்தரவிட்டனர்.தற்பொழுது தேர்தல் முடிந்த காரணத்தினால் பழைய நேரத்திற்கே மதுபான கடைகளை திறந்து வைக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
காலால் துறை அதிகாரிகள் கோரிக்கையை ஏற்று, இனி வரும் நாட்களில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மதுபான கடைகள் இரவு 11 மணி வரை செயல்படும் என்று தேர்தல் துறை ஆணையர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.அதேபோல தனியார் பார்களும் 12 வரை இயங்கி வந்தது.
தேர்தல் காரணத்தினால் இதற்கான நேரமும் மாற்றம் செய்யப்பட்டது.தற்பொழுது தேர்தல் முடிந்துள்ள காரணத்தினால் தனியார் பார்களும் பழைய நேரத்திற்கே செயல்படலாம் என்று தெரிவித்துள்ளார்.மேற்கொண்டு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் கலால் துறை துணை ஆணையர் வெளியிட்டுள்ளார்.