ரேஷன்கார்டுடன் ஆதார் இணைப்பு!! மீண்டும் காலக்கெடு கொடுத்த மத்திய அரசு!! 

0
282
#image_title

ரேஷன்கார்டுடன் ஆதார் இணைப்பு!! மீண்டும் காலக்கெடு கொடுத்த மத்திய அரசு!!

இந்தியாவில் நாம் வசிப்பதற்கான  ஆவணங்களில் இந்த ரேஷன் அட்டை மிகவும் முக்கியமான ஒன்றாகும். குடும்பத்தில் உள்ள அனைவர் பெயரும் இணைக்கப்பட்ட  இந்த கார்டின் மூலம் நாம் பல நலத்திட்டங்களையும், சலுகைகளையும் பெற்று வருகிறோம்.

இவ்வாறு முக்கியமாக உள்ள இந்த ரேஷன் அட்டையில் பெயர் நீக்குதல், இணைத்தல் போன்றவை இப்பொழுது மிகவும் சுலபமாக ஆன்லைன் முறையிலே  செய்து கொள்ளலாம்.

இந்தியாவில் ரேஷன் அட்டை எவ்வளவு முக்கியமோ அதே போன்று ஆதார் அட்டையும் மிகவும் முக்கியம். இப்போது உள்ள காலக்கட்டத்தில் அரசின் அனைத்து சலுகைகளையும் பெறுவதற்கும்,  மானியங்கள், வங்கிகணக்கு,  வருமான வரி தாக்குதல் போன்ற பலவற்றை நாம் செய்ய இந்த ஆவணம் கட்டாயம் நம்மிடம் இருக்க வேண்டும்.

இவ்வாறு முக்கியமாக உள்ள ஆதார்ருடன் அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைக்க கோரி மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

அதனையடுத்து ஆதார் அட்டையுடன் ரேஷன் கார்டையும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே இவற்றை இணைக்க வேண்டும் என்று கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் அதற்கான காலக்கெடு 2 முறை நீட்டிக்கப்பட்டது.

முன்பாக இதற்கான கடைசி தேதியாக  ஜூன் 30 ஆக அறிவிக்கப்பட்ட நிலையில்  இணைக்காத நபர்களுக்கு மீண்டும் காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த காலக்கெடுவானது இப்பொழுது செப்டம்பர் 30 வரை  நீட்டிக்கப்பட்டது. ஆகவே தவறாமல் ஒவ்வொருவரும்  ஆதார்  மற்றும்  ரேஷன்  அட்டையை கட்டாயம் இணைத்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இவ்வாறு இணைப்பதன் மூலம் அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடையலாம் மற்றும் பல மோசடிகளை இதன் வாயிலாக தவிர்க்கலாம் .இதனை நீங்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைனின் வழியாகவும் இணைக்க முடியும்.

Previous articleபள்ளிக்கல்வித்துறை செய்த குளறுபடி!! அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை திடீர் நிறுத்தம்!!
Next article10 மற்றும் +2 மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி!! ஊக்கத்தொகை வழங்கும் பிரபல நடிகர்!!