இனி எல்லாம் இந்த செயலி மூலமே அறிய முடியும் !!எஸ்பிஐ வங்கி அறிமுகபடுத்திய புதிய சேவை!!
இந்தியாவில் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தற்போது புதிய சேவையை அறிமுகப்படுத்தியாதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் எஸ்பிஐ வங்கி 45 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில் வங்கி தொழில்நுட்ப ரீதியாக பல புதுப்புது சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
ஏற்கனவே அந்த வங்கி வாட்சப் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியது. மேலும் எளிய முறையில் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் விவரங்களை எளிதில் தெரிந்துகொள்ளவும் இலவச சேவை வழங்கப்பட்டது.
இதன் மூலம் வங்கி கணக்கு இருப்பு தொகை , மினி அறிக்கை, ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் ரசீது மற்றும் சேமிப்பு டெபாசிட் போன்ற விவரங்களை வாட்சப் மூலம் தெரிந்துக்கொள்ளவும் வசதி செய்துள்ளது .
அதன்படி தற்போது மூத்த வாடிக்கையாளருக்கு புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள் வீட்டில் இருந்த்து கொண்டே வாட்சப் மூலம் பென்ஷன் ஸ்லீப்களை பெற்று கொள்ளலாம்.
முதியவர்கள் மட்டுமின்றி எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் வாட்சப் மூலம் அனைத்து விவரங்களும் தெரிந்துகொள்ளவும் வசதி உள்ளது.
முதலில் இந்த சேவையை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் 902268022 என்ற வாட்சப் எண்ணிற்கு வணக்கம் என்ற செய்தி அனுப்ப வேண்டும்.
அதனையடுத்து வங்கியின் இருப்பு, ஸ்டேட்மென்ட் மற்றும் பென்ஷன் விவரங்களை தெரிந்தது கொள்ளலாம். இதன் பற்றிய கூடுதல் தகவலை 1800 1234 அல்லது 18002100 என்ற எண்ணிற்கு கொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.