இனி இங்கு இவர்களுக்கும் பணி நிரந்தரம்! 11 பெண்களுக்கு பணிக்கான ஒப்புதல் ஆணை!

Photo of author

By Hasini

இனி இங்கு இவர்களுக்கும் பணி நிரந்தரம்! 11 பெண்களுக்கு பணிக்கான ஒப்புதல் ஆணை!

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் 11 பேர் இந்திய ராணுவத்தின் நிரந்தர அணியில் சேர்க்கப்படாமல் நிராகரிக்கப் பட்டுள்ளனர். தங்கள் அனைத்து தகுதிகளும் இருந்தும் நிராகரிக்கப்படுகிறோம் என்றும் அதனால் இதை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்றை கொடுத்தனர். அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இந்திய ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுத்தது.

ஆணையத்தில் அவர்களை சேர்த்திட நவம்பர் 26 ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்தது. அதனால் அந்த அதிகாரிகளையும் நிரந்தர கமிஷனில் சேர்ந்திட இந்திய ராணுவம் இன்று ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் பெண்கள் நிரந்தர கமிஷனில் சேர்க்கப்படுவதன் மூலம் பெண் அதிகாரிகள் ராணுவத்தில் உயர் பதவிகளுக்கு செல்லலாம்.

அதன்படி அவர்கள் சிறப்பு பயிற்சிகள் மற்றும் சவாலான பயிற்சிகளையும் மேற்கொள்வார்கள். 2020 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் ஜூனியர் அதிகாரிகளுக்கும் நிரந்தர கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் அந்த கமிஷனில் சேர்வதற்கு குறைந்தது பத்து வருடங்களாவது பணியாற்றியிருக்க வேண்டும்.

அதற்கு முன்னதாக இந்திய ராணுவத்தில் உள்ள பத்து பிரிவுகளின் கீழ் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர ஆணையம் அமைத்திடவும் ஆணையிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.