தமிழகத்தில் வீடு அல்லது நிலங்களை வாங்கினால் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. அதன் பின்னர் சொத்தை வாங்குபவர் பட்டாவை தன் பெயரில் மாற்றுவதற்கு தனியாக விண்ணிப்பிக்க வேண்டும்.சொத்தின் பட்டா வருவதற்கு சில நாட்கள் ஆகிவிடும்.
அவர் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் ஏதேனும் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பின்னரே தாசில்தார் பட்டா வழங்குவார்.இதனால் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்வோர் பட்டா தன் பெயருக்கு மாற்ற நிறைய அலைச்சல்களை சந்திக்க நேரிட உள்ளது.
இதனை எளிமையாக்கும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதன் மூலமே தானாக பட்டா சொத்து வாங்குபவரின் பெயருக்கு மாற்றிவிடும் புதிய நடைமுறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் தாலுகாவில் கடந்த 17ம் தேதி சோதனை அடிப்படையில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இது வெற்றிகரமாக செயல்படவே ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு செய்த உடன் தானாக பட்டாமாறுதல் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா,அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா,இதுபோன்ற முழு விவரமும் அறிந்து பத்திரபதிவு செய்யத உடன் பட்டா சொத்து வாங்குபவரின் பெயரில் மாறிவிடும்.