Tamilnadu Gov: ரேசன் கார்டில் பெயர் நீக்க புதிய முறையை அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ரேசன் கார்டில் பெயர் நீக்க வேண்டுமெனில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு வரும் நிலையில் , தற்போது அதிக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த முறை படி அரசு ஊழியர்கள் களச் சரிப்பார்ப்பு மூலம் நேரடியாகச் சென்று பெயர் நீக்கம் செய்ய துவங்கியுள்ளனர்.
ஆன்லைனில் பெயர் நீக்கம் செய்ய, யாருடைய பெயரை நீக்க வேண்டுமோ அவருடைய இறப்பு சான்றிதழ் அல்லது திருமண சான்றிதழ் சமர்ப்பிக்கப்படும் நிலையில் பல தவறுகள் இதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு ஊழியர்கள் யாருடைய குடும்பத்தில் பெயரை நீக்க வேண்டுமோ அங்கு நேரடியாக சென்று களப்பணி மேற்கொண்டு ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்து வருகின்றனர்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு குறைந்த விலையில் ரேஷன் பொருட்களை வழங்குவதற்காக அரசால் வழங்கப்பட்ட ஆவணம் தான் ரேஷன் கார்டு.
ஆனால் , தற்பொழுது குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளால் தங்கள் பிள்ளைகளின் பெயர்களை பெற்றோர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கம் செய்து விடுகின்றனர். மேலும் சில வீடுகளில் இறந்தவர்களின் பெயர்களை நீக்காமல் உள்ளனர். இதன் காரணமாக அரசு ஊழியர்கள் நேரடியாக சென்று ஒவ்வொருவரின் வீட்டிலும் பெயர் நீக்கம் செய்ய இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை சரி பார்ப்பது மற்றும் திருமணமானவர்களின் திருமண சான்றிதழை சரி பார்ப்பது என நேரடியாக அனைத்தையும் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.