இனி இந்த பேருந்தில் பயணிக்க வெறும் 5 ரூபாய் தான்!! வெளியான அசத்தல் திட்டம்!!

Photo of author

By Parthipan K

இனி இந்த பேருந்தில் பயணிக்க வெறும் 5 ரூபாய் தான்!! வெளியான அசத்தல் திட்டம்!!

Parthipan K

Updated on:

Just 5 rupees to travel by bus!! Awesome project!!

இனி இந்த பேருந்தில் பயணிக்க வெறும் 5 ரூபாய் தான்!! வெளியான அசத்தல் திட்டம்!!

தமிழ்நாடு அரசு பெண்கள் பயன்பெறும் வகையில் புதிய அறிக்கை ஒன்றை வெளிட்டது.அது அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் மட்டும் பேருந்தில் பயணம் செய்ய இலவசம் என கூறப்பட்டது.இந்நிலையில் பெண்கள் அனைவரும் நேரம் கடந்தாலும் அரசு பேருந்தை எதிர்பார்த்து பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இதனால் தனியார் பேருந்துகளில் பயனாளிகளின் கூட்டம் குறைந்து காணப்படும். இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தனியார் பேருந்து நிறுவனம் சில நாள்களுக்கு முன்பு தகவல் ஒன்றை வெளியிட்டது.கோவை கந்தே கவுண்டன் சாவடி முதல் உப்பிலிபாளையம் வழியில் அரசு மற்றும் தனியார்  பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த வழித்தடத்தில் அரசு பேருந்துகள் செயல் பட்டாலும், பள்ளி நேரத்திற்கு தனியார் பேருந்துகள் தான் அதிகளவில் செயல்படுகின்றன.எனவே கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அடுத்த வாரம் திறக்கப்படும் நிலையில் தனியார் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளிட்டுள்ளது. கவுண்டன் சாவடி முதல் உப்பிலிபாளையம் வழியில் செல்லும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்ய அரசு மற்றும் தனியார் மாணவர்கள் மற்றும் பெரியவர்கள்  என அனைவருக்கும் பேருந்து கட்டணமாக  5 ரூபாய் என அறிவித்துள்ளது.

தனியார் பேருந்து நிறுவனம் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை வெளிட்டுள்ளது.கோவையில் அரசு பேருந்துகளுக்கு இணையாக தனியார் பேருந்துகள் இந்த செயலை செய்துள்ளது.இந்த செயல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.அரசு பேருந்தை போன்றே தனியார் பேருந்திலும் முதியோர்,பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்க இலவசம் என அறிவித்துள்ளது.