இனி ஓபிஎஸ் க்கு எண்டு கார்டு தான்.. இபிஎஸ்-யின் அசத்தல் திட்டம்!! அவசர அழைப்பு இதற்குத்தானா?
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெகு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பானது வந்துள்ளது.இதனையொட்டி நாளை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
குறிப்பாக இந்த கூட்டம் நடத்துவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், தேர்தல் ஆணையம் அதிமுகவின் சட்ட விதிகள் அனைத்தையும் அங்கீகரித்துள்ளது என்பதை தெரிவிப்பதற்காக தான். அந்த வகையில் அதிமுகவின் முழு பொறுப்பும் எடப்பாடி பக்கம் சென்றடைந்துள்ளது.
இனி ஓபிஎஸ் க்கு அதிமுக பக்கம் இடமே இல்லை என்பது திட்டவட்டமாக தெரிகிறது. இந்த சூழலில் ஓபிஎஸ் மற்றும் தினகரன் கைகோர்த்த விவகாரம் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என்றும் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி ஓபிஎஸ் எவ்வாறு திருச்சி மாநாட்டை பிரமாண்டமாக நடத்தினாரோ, அதேபோலவே எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் மதுரையில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்த திட்டமிட்டு வருவதாகவும் அதற்கான இடத்தை குறித்து நாளை ஆலோசனை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அத்தோடு வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் மேற்கொண்டு பூத் கமிட்டிகள் அமைப்பது குறித்தும் எடப்பாடி அவர்கள் பேச இருப்பதாக கூறுகின்றனர்.இது மட்டுமின்றி அதிமுகவில் தற்போது இரண்டு கோடி உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர்.
அது தற்பொழுது எந்த கட்டத்தில் உள்ளது என்பதை எடப்பாடி அவர்கள் கேட்டறிந்து மேற்கொண்டு பணியை விரைந்து முடிக்க முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இவ்வாறு அடுத்தடுத்து பல திட்டங்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளதாகவும் இதில் முக்கிய அறிவிப்பு குறித்து நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.