இனி ஒரு நாளில் 5000 முதல் 25000 தான் லிமிட்!! பணம் அனுப்ப புதிய ரூல்ஸ்!!

Photo of author

By Rupa

இனி ஒரு நாளில் 5000 முதல் 25000 தான் லிமிட்!! பணம் அனுப்ப புதிய ரூல்ஸ்!!

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் பல செயல்பட்டு வருகின்றன.இன்று பெரும்பாலான மக்கள் ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கின்றனர்.மத்திய மற்றும் மாநில அரசின் திட்ட பலனை பெற வங்கி கணக்கு முக்கியமாகும்.அதேபோல் இந்தியா தற்பொழுது டிஜிட்டல் பரிவர்த்தனையில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது.முன்பெல்லாம் வங்கிக்கு சென்று கால்கடுக்க நின்று சலான் சமர்ப்பித்து பணம் அனுப்ப வேண்டிய நிலை இருந்தது.தற்பொழுது வங்கிக்கு செல்வதை தவிர்த்து டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்துவருகின்றோம்.ஆனால் சிலர் இன்றும் வங்கி கிளைகள் மூலம் பணம் அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இவ்வாறு பணம் அனுப்புவதற்கு ரிசர்வ் பேங்க் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.வங்கிக் கணக்கு இல்லாத ஒருவர் பிறருக்கு ஒரு முறைக்கு ரூ.5,000 மட்டுமே அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாடு விதித்திருக்கிறது.அதேபோல் நபர் ஒருவருக்கு ஒரு மாதத்தில் அதிகபட்சம் ரூ.25,000 மட்டுமே அனுப்ப முடியும் என்று தெரிவித்திருக்கிறது.

மேலும் வங்கி கணக்கு இல்லாதவர் வழங்கிய பணத்தின் பதிவுகளை அனைத்து வங்கிகளும் கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென்று தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி உள்நாட்டு பணப் பரிவர்த்தனை தொடர்பான 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விதிகளை திருத்தி வருகின்ற நவம்பர் 01 முதல் புதிய விதிகள் அமலுக்கு வரும் என்று தெரிவித்திருக்கிறது.

இவ்விதிப்படி கணக்கு இல்லாதவர்கள் வங்கியில் செலுத்திய பணம் தொடர்பான விவரம்,பணம் பெற்றவரின் பெயர் மற்றும் முகவரி விவரங்களை வங்கிகள் பாதுகாக்க வேண்டுமென வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருக்கிறது.