இனி தனி வங்கி கணக்கிற்கு தான் பணம்!! மத்திய அரசின் அதிரடி உத்தரவு!!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் என் எஸ் எஸ் உள்ளது. நாட்டு நல பணி திட்டத்துக்கு என்று ஒவ்வொரு பள்ளிகளிலும் இந்த அமைப்பு உள்ளது. இதில் குறிப்பிட்ட சில மாணவர்கள் பங்கேற்று நாட்டு நல பணித்திட்டங்களை கற்றுக் கொள்வதுடன் நாளடைவில் அவர்களது வாழ்க்கை பயணத்திற்கும் அது உதவி புரியும்.
அந்த வகையில் இந்த என் எஸ் எஸ் திட்டத்திற்கு மத்திய அரசு வருடம் தோறும் நிதி வழங்குகிறது. முன்பெல்லாம் இந்த என் எஸ் எஸ் நிதியானது தனிப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது மத்திய அரசு பள்ளிகளின் வங்கி கணக்கிற்கே இந்த நிதியானது வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
எனவே இதற்கென்று தனியாக ஓர் வங்கி கணக்கு ஒன்றை தொடங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வரும் 20 ஆம் தேதிக்குள் என் எஸ் எஸ் திட்டம் செயல்படும் அரசு பள்ளிகள் அனைத்தும் ஸ்டேட் பாங்க் வங்கியில் புதிதாக இதற்கென்று வங்கி கணக்கு தொடர வேண்டும்.
குறிப்பாக பூஜ்ஜியம் இருப்பு சேமிப்பு கணக்காக அது இருப்பது கட்டாயம் என்று தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு வங்கி கணக்கு தொடங்கியவுடன் வரும் இருபதாம் தேதிக்குள் வங்கி கணக்கு சம்பந்தமான அனைத்து தரவுகளையும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்.
இந்த என் எஸ் எஸ் அமைப்பிற்கான நிதியானது முறையாக சென்றடைகிறதா என்பதை தெரிந்து கொள்ளவே இந்த புதிய முறை கொண்டு வந்துள்ளதாக உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.இந்த அமைப்பிற்கு வரும் நிதியானது தடை படாமல் கிடைக்கவும் இந்த புதிய செயல்முறை வழிவகுக்கும்.