இனி பச்சை நீளம் ஆகிய பால்பாக்கெட்டுகளின் விலையும் உயர்வு! திமுக திட்டத்தை அம்பலப்படுத்திய டிடிவி!

Photo of author

By Rupa

இனி பச்சை நீளம் ஆகிய பால் பாக்கெட்டுகளின் விலையும் உயர்வு! திமுக திட்டத்தை அம்பலப்படுத்திய டிடிவி!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் பாலின் விலையை குறைப்பது போல் குறைத்து அப்படியே அதிலிருந்து தயாராகும் பொருட்களின் விலையை உயர்த்தியது. அந்த வகையில் இன்று பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி ஆவினின் ஆரஞ்சு பால் விலையை லிட்டருக்கு ரூம் 12 ரூபாய் என அதிகப்படுத்தி உள்ளது. இது குறித்து பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் டிடிவி தினகரன் இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,

ஆவின் ஆரஞ்சு பால் விலையை தி.மு.க அரசு திடீரென உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 சேர்த்து கொடுப்பதாகக் கூறிவிட்டு, விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.12 அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.

https://twitter.com/TTVDhinakaran/status/1588406614494937088

மற்ற ஆவின் பால் வகைகளின் விலையையும் அடுத்தடுத்து உயர்த்த மக்கள் விரோத தி.மு.க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உயர்த்தப்பட்ட ஆரஞ்சு பால் விலையைக் குறைப்பதுடன், மற்ற பால் விலையையும் உயர்த்தக்கூடாது என தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்

https://twitter.com/TTVDhinakaran/status/1588406616269160450

இந்த பால் விலை உயர்வை கண்டித்து பல தரப்பிப்னர் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் தற்பொழுது டிடிவி தினகரன் கூறியிருப்பது,அடுத்தக்கட்ட திமுகவின் திட்டம் போல் உள்ளது.மேலும் தற்பொழுது உயர்த்தியுள்ள பால் விலையை குறைப்பது மட்டுமல்லாமல் நாளடைவில் மற்ற பால்களின் விலையையும் உயர்த்த வேண்டாம் என்று வலியுறுத்தி கூறியுள்ளார்.