இனி இதுதான் தண்டனை! விஏஓக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0
202
now-this-is-the-punishment-shock-waiting-for-vao
now-this-is-the-punishment-shock-waiting-for-vao

இனி இதுதான் தண்டனை! விஏஓக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூர் வேமாண்டம்பாளையத்தை அடுத்த லாகம்பாளையம் அருகே உள்ள துலுக்கன் தோட்டம் செம்மம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் அரை ஏக்கர் நிலம் வைத்துள்ளார். அந்த நிலத்திற்கு  பட்டா மாறுதல் செய்ய லாகம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது கார்த்திக்கிடம் அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரி அருண் பிரசாத் பட்டா மாறுதல் செய்ய ரூ. 10 ஆயிரம் தர வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இதுபற்றி கார்த்திக் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ஆலோசனைப்படி கார்த்திக் கொட்டக்காட்டு்ப்பாளையத்தில் உள்ள லாகம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றார்.

கார்த்திக் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரி அருண்பிரசாத்திடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அருண் பிரசாத்தை கையும்  களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அருண்பிரசாத் மீது கோபி ஆர். டி. ஓ. திவ்யபிரியதர்ஷினி நடவடிக்கை எடுத்துள்ளார். அவரை பணி இடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Previous articleசாலையில் படுத்து போராட்டம் செய்த குடிமகள்! மதுபாட்டில்  விலையை குறைக்க வேண்டும்!
Next articleஇயக்குனரோடு முட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன்? கலக்கத்தில் படக்குழு!