Private Schools: இனி முன் அனுமதி பெற்ற பிறகுதான் இது நடத்த வேண்டும் ! தனியார் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

Photo of author

By Jeevitha

NCC CAMP: கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நிகழ்ந்த கொடூரத்தை அடுத்து தனியார் பள்ளிகளுக்கு முக்கியமான சில விதிமுறைகளை தனியார் பள்ளிகள் இயக்குநரகம் விதித்துள்ளது.

என்சிசி முகாம் என்ற பேரில் போலியான பயிற்சி முகாமினை கிருஷ்ணகிரி மாவட்டதில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்துள்ளது. சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியாக இருந்த சிவராமன் அந்த முகாமினை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தை அடுத்து தற்போது பல்வேறுபட்ட புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாணவிகளின் நலன் கருதி அவ்விதிமுறைகளை தனியார் பள்ளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

சிவராமன் அவர்களால் மாணவிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு தனியார் பள்ளி இயக்குநரகம் முகாம்கள் நடத்துவது தொடர்பான புதிய எச்சரிக்கையை தனியார் பள்ளிகளுக்கு விடுத்துள்ளது.

அதன்படி இனி வரும் காலங்களில் அனுமதி பெறாத என்சிசி முகாம்கள் முற்றிலுமாகத் தடுக்கப்படும். முறையாக பயிற்சி பெற்ற என்சிசி பயிற்சியாளர்கள் மட்டுமே மாநில அமைப்பின் முன் அனுமதியுடன் முகாமினை நடத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாணவ மாணவியரும் தனித்தனியாக அவரவர்களின் பெற்றோரிடம் அனுமதி பெற்று அவர்களின் கையொப்பத்துடன் மட்டுமே என்சிசி போன்ற முகாம்களில் கலந்து கொள்ள முடியும்.

இதையடுத்து மாணவர்களுக்கு ஆண் பயிற்சியாளரும் மற்றும் மாணவிகளுக்கு பெண் பயிற்சியாளரும் மட்டுமே பயிற்சியளிக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.