UPI முறை அறிமுகப்படுத்தியதில் இருந்து நமது நாட்டில் ஆன்லைன் பரிவர்த்தனை அசுர வளர்ச்சி கண்டு வருகிறது.அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு UPI சேவையை வழங்கி வருகிறது.
கூகுள் பே,போன்பே,பேடிஎம்,அமேசான் பே போன்ற UPI செயலிகள் மூலம் இந்தியர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவானது தற்பொழுது ஒரு முக்கிய தகவலை வெளியிட்டிருக்கிறது.
கூகுள் பே,போன்பே,பேடிஎம் போன்ற UPI செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் அனைத்து பயனர்களுக்கும் பரிவர்த்தனையில் உச்ச வரம்பு மற்றும் மேலும் சில கட்டுப்பாடுகள் வரவிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது.ஆனால் முதலில் கூகுள் பே செயலியில் இந்த விதிமுறை அமலுக்கு வரும் என்று அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறது.
வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மொபைலில் ஒரு UPI செயலி மட்டுமே ஓபன் செய்ய முடியும்.ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைத்து கணக்கிற்கும் ஒரே மொபைல் தான் கொடுத்திருப்பார்கள்.இதனால் அவர்களுக்கு UPI செயலி பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருந்தாலும் கூகுள் பே,போன் பே போன்ற UPI செயலிகளை ஏதேனும் ஒரு வங்கி கணக்கு மட்டுமே திறக்க முடியும்.காரணம் மொபைல் நம்பர் பயன்படுத்தி UPI கணக்கு திறக்கப்படுவதால் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு OTP வெரிபிகேஷனில் சிக்கல் ஏற்படும்.
ஆனால் தற்பொழுது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அதில் சில மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறது.இனி ஒரு வங்கி கணக்கை பயன்படுத்தி பிரைமரி மற்றும் செகண்டரி என்று இரண்டு UPI ஐடி திறக்கலாம்.அதாவது இரண்டாவதாக திறக்கும் செகண்டரி UPI ஐடிக்கு எந்த ஒரு வங்கி கணக்கு விரவரமும் தேவைப்படாது.பிரைமரி பயனர்கள் வழக்கம்போல் UPI ஐடியை மூலம் பணப் பரிவர்த்தனை செய்யலாம்.செகண்டரி ஐடி மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான லிமிட்டை பிரைமரி ஐடி நிர்ணயிக்க முடியும்.இதனால் பணப் பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்படமால் இருக்கும்.