இனி நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க அனுமதி!! அரசின் அதிரடி உத்தரவு!!

Photo of author

By Rupa

இனி நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க அனுமதி!! அரசின் அதிரடி உத்தரவு!!

இந்தியாவைக் கடந்த பல நாடுகள் கலாச்சார முறையில் வித்தியாசமான முறையில்  வாழ்ந்து வருகின்றனர் என்றே கூறலாம்.அந்த வகையில் ஸ்பெயின் நாட்டில் பாலின வேறுபாடின்றி பெண்களும் நீச்சல் குளம் குட்டை உள்ளிட்ட இடங்களில் ஆடையின்றி குளிக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தனர்.இது 2020 அன்று அமலுக்கு வந்த நிலையில் சரிவர நடைமுறைப்படுத்த முடியவில்லை.ஒரு சில நீச்சல் குளங்களில் இதற்கு தடை விதித்த நிலையில் பல புகார்கள் வர நேரிட்டது.

இதனையடுத்து கடந்த 2023 ஆம் ஆண்டு அந்நாட்டு அரசாங்கம் பாலினம், மத நம்பிக்கை உள்ளிட்டவைகளை பார்க்கக் கூடாது என கூறி உத்தரவிட்டு பெண்கள் ஆடையின்றி குளிக்கலாம் என கூறியது. அதேபோல தற்பொழுது ஜெர்மனி நாட்டிலும் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் சூரிய ஒளியில் மேலாடையின்றி பொதுநீச்சல் குளத்தில் குளித்துள்ளார்.இதனை தடை செய்து அவரை அந்நீச்சல் குள நிர்வாகிகள் வெளியேற்றினர்.

இவ்வாறு வேறுபாடு காண்பது முறையானது அல்ல எனக் கூறி குறை தீர்ப்பாளர் அலுவலகத்தை அப்பெண்மணி நாடினார்.ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு இருக்கவே கூடாது என்றும் பெண்கள் விரும்பும் பட்சத்தில் ஆடை இன்றி கூட குளிக்கலாம் எனவும் கோரிக்கை விடுத்தார்.இந்த பெண்மணி வைத்த கோரிக்கையை ஏற்று, இனி வரும் நாட்களில் பெர்லின் நகரில் எந்த ஒரு பெண்மணியும் தாங்கள் விருப்பப்பட்டால் ஆடையின்றி பொதுக் குளங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளனர்.

மேற்கொண்டு அவர்கள் கூறியதாவது, ஆண் பெண் என்ற வேறுபாடே இருக்கக் கூடாது இது முழுவதும் சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று தெரிவித்தனர். மேற்கொண்டு பெர்லின் நகரில் உள்ள அனைத்து பொது நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களில் அந்நிறுவனங்கள் உடையின் விதிமுறைகளை மாற்றி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.