இனி  அரசு பணி தேர்வுகளுக்கு செல்போனிலே விண்ணப்பிக்கலாம்! இதோ அதற்கான வழிமுறைகள்!

0
155
Now you can apply for government job exams on your cell phone! Here are the steps!
Now you can apply for government job exams on your cell phone! Here are the steps!

இனி  அரசு பணி தேர்வுகளுக்கு செல்போனிலே விண்ணப்பிக்கலாம்! இதோ அதற்கான வழிமுறைகள்!
அரசு பணி தேர்வு எழுதுபவர்கள் அனைவரும் அருகில் இருக்கும் புரவுசிங் சென்டருக்கு சென்று அரசு பணி தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிப்பது வழக்கம்.இவர்கள் விண்ணபிப்பவரிடமிருந்து சிறு தொகையை பெறுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.தற்போது வரை இது வழக்கமாக உள்ளது.தற்போது சட்டமன்றதில் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதற்கான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்று மனிதவள மேலாண்மை குறித்து மானியக் கோரிக்கை விவதாம் நடைபெற்றது.இந்த விவாததின் போது நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.அதில் குறிப்பாக டி.என். பி.எஸ்.சி எழுதும் தேர்வாளர்களுக்காக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.இனி செல்போன் மூலமே தேர்வு எழுதுபவர்கள் விண்ணப்பிக்கும் வகையில் ஓர் செயலி செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

அரசு பணியாளர் தேர்வாணையம் ஆசிரியர் தேர்வு வாரியம் சீருடைப் பணியாளர் குழுமம் ஆகிய ஆகிய பணியிடங்களுக்கு இந்த ஆப் மூலமே விண்ணப்பிக்கலாம் என்று கூறினார்.அதுமட்டுமின்றி தேர்வு குறித்த அறிவிப்புக்கள் தேர்வு முடிவுகள் அனைத்தும் தெரிந்து கொள்ளும் விதத்தில் இந்த ஆப் வடிவமைக்கப் படுவதாக கூறினார்.அதுமட்டுமின்றி விண்ணப்பிப்பவர்கள் சமர்ப்பிக்கப்படும் சான்றிதழ்களையும் இந்த ஆப் மூலமே சரிபார்த்து கொள்ளலாம் என்றும் கூறினார்.இந்த திட்டம் கொண்டு வர ரூ.20லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Previous articleஅதிமுக வும் எங்கள் கட்சி தான்! உரிமை கொண்டாடும் சசிகலா!
Next articleஅநியாயம் செய்யும் அண்ணா பல்கலைகழகம்! கண்டிக்கும் அன்புமணி ராமதாஸ்