இனி வீட்டில் இருந்தபடி ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்!! ஜஸ்ட் இந்த லிங்க் மட்டும் கிளிக் பண்ணுங்க!!

Photo of author

By Divya

இனி வீட்டில் இருந்தபடி ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்!! ஜஸ்ட் இந்த லிங்க் மட்டும் கிளிக் பண்ணுங்க!!

நாட்டு மக்களுக்கு முக்கிய அடையாள ஆவணமாக ரேசன் கார்டு உள்ளது.நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ரேசன் அட்டை மூலம் மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து வழங்கி வரும் அரசி,மலிவு விலை பொருட்களால் பலனடைந்து வருகின்றனர்.அது மட்டுமின்றி ரேசன் அட்டை அரசு நலத் திட்டங்களுக்கு,வங்கி கடன் பெறுதல் போன்றவற்றிற்கு பயன்படுகிறது.

தமிழ்நாட்டில் ரேசன் கார்டு வைத்திருக்கும் குடும்பத்தலைவிகளுக்கு உரிமை தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்ப்படுவதால் ஏரளமான மக்கள் புதிதாக ரேசன் கார்டு பெற்று விண்ணப்பித்து வருகின்றனர்.இவ்வாறு பலவற்றிற்கு ரேசன் கார்டு தேவைப்படுவதால் இதை சிரமமின்றி ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்லைனில் ரேசன் கார்டுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி?

முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையத்தளத்திற்குச் சென்று ‘smart card application services’ என்ற ஆப்ஷனுக்கு கீழ் இருக்கும் ‘apply new smart card’ என்பதை கிளிக் செய்வும்.

பிறகு குடும்பத் தலைவர்/தலைவியின் புகைப்படத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.அதன் பின்னர் முகவரி சான்றை பதிவேற்றவும்.பிறகு ‘submit’ என்பதை கிளிக் செய்யவும்.பிறகு உங்களுக்கு ஒரு Reference number வழங்கப்படும்.

அந்த நம்பரை https://www.tnpds.gov.in/ என்ற இணையத்தில் பதிவேற்றி உங்கள் ரேசன் கார்டின் விண்ணப்ப நிலையை சரி பார்த்துக் கொள்ளவும்.உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு புதிய ரேசன் கார்டு தபால் வழியாக அனுப்பி வைக்கப்படும்.