இனி வாட்ஸ்அப் மூலம் பிளைட் டிக்கெட் புக் செய்யலாம்!!  பிரபல நிறுவனம்    வெளியிட்ட குட் நியூஸ்!

0
159
Now you can book flight tickets through WhatsApp!! Good news released by the famous company!
Now you can book flight tickets through WhatsApp!! Good news released by the famous company!

இனி வாட்ஸ்அப் மூலம் பிளைட் டிக்கெட் புக் செய்யலாம்!!  பிரபல நிறுவனம்    வெளியிட்ட குட் நியூஸ்!

நம் நாட்டில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக வான்வழி(விமானம்) போகுவரத்து திகழ்கிறது.இந்த போக்குவரத்து நீண்ட தூர பயணத்தை எளிமையாக்குகிறது.மற்ற துறைகளை காட்டிலும் இந்த போக்குவரத்து மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாக இருக்கிறது.விமான போக்குவரத்து மூலம் உலகில் எந்த பகுதிக்கும் எளிதில் சென்று வர முடியும்.

இதர போக்குவரத்துகளை காட்டிலும் விமானப் போக்குவரத்து மிகவும் பாதுகாப்பான ஒன்றாக திகழ்கிறது.உலகிலேயே அதிக வர்த்தக மதிப்பு வாய்ந்த விமான போக்குவரத்து கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.சர்வேத நாடுகள் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது சிறிய நகரங்களுக்கும் விமான போக்குவரத்தை தொடங்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ(IndiGo) வட்ஸ்அப் சாட் மூலம் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

6Eskai என்று அழைக்கப்படும் இந்த ஏஐ பதிவு உதவியாளர்(AI registration assistant) சேவையை ரைஃபி எனும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.இதன் மூலம் பயனர்கள் தங்கள் வட்ஸ்அப் சாட் மூலம் விமான டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

இந்த 6Eskai ஏஐ பதிவு உதவியாளர் டிக்கெட் முன்பதிவு,போர்டிங் பாஸ்,விமானங்கள் வருகை தொடர்பான விவரங்களுக்கு பதில் அளிக்கும்.அதேபோல் +91 7065415858 என்ற எண்ணிற்கு வட்ஸ்அப் சாட் செய்தாலே போதும்.இண்டிகோ நிறுவனத்தின் 6Eskai ஏஐ பதிவு உதவியாளர் விமான டிக்கெட் முன்பதிவு தொடர்பான உரையாடல்களை வழங்குகிறது.இந்த சேவை ஆங்கிலம்,தமிழ்,இந்தி உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வழங்கப்படுகிறது.இதன் காரணமாக விமான டிக்கெட் புக் செய்வது மிகவும் எளிமையாகி விடுகிறது.