இனி வீட்டிலிருந்தே ஈஸியாக ஓட்டுனர் உரிமம் பெறலாம்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!

Photo of author

By Rupa

இனி வீட்டிலிருந்தே ஈஸியாக ஓட்டுனர் உரிமம் பெறலாம்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!

ஓட்டுனர் உரிமம் பெற வேண்டுமென்றால் ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று அங்கு நடக்கும் சோதனையில் தேர்வாக வேண்டும். அப்படி தேர்வாகும் பட்சத்தில் ஓட்டுநர் உரிமம் கிடைக்கும். தற்பொழுது இதில் புதிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இனிவரும் நாட்களில் ஓட்டுநர் உரிமத்தை தனியார் நிறுவனங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதற்கான அனுமதியும் வழங்கியுள்ளது.

ஆர்டிஓ மூலம் விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் https://parivahan.gov.in/parivahan/ உரிமம் குறித்து விண்ணப்பம் செய்ய வேண்டும்.
அதில் கேட்கும் தரவுகளை சரியாக கொடுக்க வேண்டும்.
ஆதார் கார்ட் வாக்காளர் உரிமம் உள்ளிட்டவற்றை முறையாக கொடுக்க வேண்டும்.
சோதனை தேர்வுக்கு பின் நீங்கள் பெறப்போகும் உரிமத்தை ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் வாங்குவது குறித்து கிளிக் செய்ய வேண்டும்.
மேற்கொண்டு ப்ரொசீட் கொடுத்தால் ஆர்டிஓ அலுவலகத்தில் நீங்கள் தேர்வு குறித்து குறுஞ்செய்தி வரும். அதில் தேர்வான பிறகு உரிமம் பெற்றுக்கொள்ளலாம்.

இதுவே தனியார் நிறுவனத்திடமிருந்து லைசன்ஸ் வாங்க வேண்டுமென்றால் குறிப்பிட்ட விதிமுறைகள் உள்ளது:

முதலில் தனியார் நிறுவனத்திற்கு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான தேர்வு நடத்த கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் நிலம் என்பது கட்டாயம். இதுவே நான்கு சக்கர வாகன உரிமம் பெற வேண்டும் என்றால் இரண்டு ஏக்கர் என்று கூறியுள்ளனர். அங்கு தேர்வு செய்யப்பட இருக்கும் பயிற்சியாளர் குறைந்தபட்ச பட்டய படிப்பாவது முடித்திருப்பது அவசியம். மேற்கொண்டு ஐந்து ஆண்டுகள் அனுபவம் நிறைந்த வரை பணியமர்த்த வேண்டும். ஒரு மாதத்திற்குள் மூன்று சக்கர வாகன பயிற்சியும் அதுவே கனரக வாகனங்களுக்கு ஆறு வார பயிற்சியும் அளிக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளனர். இந்த புதிய விதிமுறையானது வரும் மாதம் முதல் தேதியிலிருந்து அமலாகும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெரும் பட்சத்தில் உரிமம் பெற்றுக்கொள்ளலாம்.