இனி வாட்ஸ் ஆப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!! மின்வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!
மக்களுக்கு சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்குவதன் அவசியத்தை உணர்ந்து அதற்கான விரிவான பார்வையோடு ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ளது.அந்த வகையில் தமிழ்நாட்டிலும் பல்வேறு அரசு சேவைகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த விதத்தில் தமிழக மக்கள் தங்களது மின்கட்டணத்தை மொபைல் போனில் உள்ள “வாட்ஸ்ப் ஆப் & யுபிஐ செயலி ” முலம் கட்டலாம் என்கிற புதிய நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியமான Tangedco தெரிவித்துள்ளது.இனி வாட்ஸ் ஆப்பில் Tangedco இலச்சினை மற்றும் பச்சை குறியீடு ✅ இருக்கும்.
மேலும் கிழே கொடுக்கப்படுள்ள 94987 94987 என்ற எண்னை உறுதி செய்து கொள்ள வேண்டும்.நாம் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணிலிருந்து Tangedco மொபைல் எண்ணிற்க்கு மெசேஜ் அனுப்பினால் அதில் பில் கட்டணம் வரும்.அதில் View Bill, Pay bill என இரு வசதிகள் வரும்.முதலில் வியூ பில்லை கிளிக் செய்தால் உங்கள் மின் கட்டணம் பிடிஎஃப்பில் டவுன்லோடு செய்யலாம்.
அந்த கட்டணத்தை ஒரு முறை பார்த்துவிட்டு பிறகு pay bill என்பதை கிளிக் செய்ய வேண்டும்.அதை கிளிக் செய்தவுடன் போன் பே, கூகுள் பே செயலிகளில் எது வேண்டுமோ அதை ஓபன் செய்து பணத்தை செலுத்திக் கொள்ளலாம்.இதன் மூலம் மின் கட்டணம் செலுத்துவது மிகவும் எளிமையாக இருக்கும்.