இனி மருதானிலேயே ஜாக்கெட் போடலாம்! இணையத்தை கலக்கி வரும் புதிய ட்ரெண்டு!

Photo of author

By Rupa

இனி மருதானிலேயே ஜாக்கெட் போடலாம்! இணையத்தை கலக்கி வரும் புதிய ட்ரெண்டு!

Rupa

Updated on:

Now you can put the jacket on Marudhani! The new trend that is rocking the internet!

இனி மருதானிலேயே ஜாக்கெட் போடலாம்! இணையத்தை கலக்கி வரும் புதிய ட்ரெண்டு!

வளர்ந்து வரும் காலகட்டத்தில் தொடர்ந்து மக்கள் தொடர்ந்து புதியதை நோக்கியே செல்கின்றனர். அதையேதான் அதிக அளவு எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் பெண்கள் தாங்கள் அணியும் உடைகளில் புது புது மாடல்களை தேடி ஓடிக்கொண்டே உள்ளனர். அந்த வகையில் தற்பொழுது அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் ஓர் ஜாக்கெட் வலம் வருகிறது. இதை நாம் நமது கபோர்ட் குள் வைக்க  முடியாது. இதை அழியும் வரை மட்டுமே நாம் உபயோகப்படுத்த முடியும். அவ்வாறு ஓர் பளவுசை கண்டுபிடித்துள்ளனர்.

அது என்னவென்றால் மருதாணி ஜாக்கெட். இது சமீப காலமாக பெரும் அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. காலம் காலமாக மருதாணியை பெண்கள் கை மற்றும் கால்களில் போடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். தற்பொழுது வளர்ந்து வரும் காலகட்டத்தில் கர்ப்பமாக உள்ள பெண்கள் தங்களது வயிற்றின் மேல் போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். அதற்கும் அடுத்தபடியாக தற்பொழுது என்ன பிளவுஸ் என்ற ஒன்று வலம் வருகிறது.

அதாவது அந்த காலத்தில் பிளவுசை இல்லாமல் இருந்தது போல தற்பொழுது அவர்களின் முதுகின்மேல் பிளவுஸின் வடிவில் மருதாணி போடப்படும். அதனால்தான் இது அழியும் பிளவுஸ் என்றும் கூறுகின்றனர். இந்த மருதாணி பிளவுஸில் நமது சென்னையை சேர்ந்த பெண் அமெரிக்காவில் மிகுந்த பிரபலமாகி வருகிறார்.மேலும் பெண்களும் அதுபோல ஜாக்கெட் போடா மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.அதுமட்டுமின்றி இந்த புதிய டிரெண்டிங் சமூக வலைத்தளங்களில் அதிகளவு பிரபலமாகி வருகிறது.நாளடைவில் பெண்கள் புதிய மாற்றத்தை கொண்டு வந்து முந்தைய காலத்தில் வாழந்தவர்கள் போல மாறி வருகின்றனர்.இந்த பிளவுசுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும் பலர் எதிர்ப்பையே தெரிவிக்கின்றனர்.