இனி பள்ளிக்கு ஸ்கூட்டரில்  பயணிக்கலாம்!! மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!

Photo of author

By Jeevitha

இனி பள்ளிக்கு ஸ்கூட்டரில்  பயணிக்கலாம்!! மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!

பல மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளையும்  அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் , புத்தகம், நோட்டு போன்ற பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது.

அதனை போல மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அசாம் மாநிலத்தில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

அதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்கூட்டர் மற்றும் மிதிமண்டி வழங்கும் திட்டத்தை  நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் செவிலியர் கல்லூரிகளில்  பிற்படுத்தப்பட்ட 6 சமூகத்தை சேர்ந்த  மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் மற்றும் ஏழை பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க திட்டம் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டத்து.

இந்த திட்டங்கள் அந்த மாநில மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இத்திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படவில்லை. 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 60% சதவீதம் பெற்ற மாணவிகளுக்கும் , 70% சதவீதம் பெற்ற மாணவருக்கும் மட்டும் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று தெரிவித்தள்ளது. இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.