இனி ரிமோட் கண்ட்ரோலையே ஓட்டு போடலாம்! இதுதான் டிஜிட்டல் இந்திய வா!
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் நடைபெற்றுவருகின்றது. இதில் பல அரசியல் பிரமுகர்கள் அவரவர் தொகுதிகளில் பல நூதன முறையில் பொதுமக்களை கவர்ந்து தங்களது ஓட்டுகளை சேகரித்து வருகிறார்கள். நேற்று எம்.பிக்களுக்கு விருது வழங்கும் விழா நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கலந்துக்கொண்டார். மற்றும் சிறப்பாக செயல்ப்பட்ட எம்.பிகளுக்கு விருது வழங்கி எம்.பிகளை மகிழ்வித்தார்.
இது ஒரு தரியார் அமைப்பால் நடத்தப் பட்ட விருது வழங்கும் விழாவாகும். மேலும் அவர் இந்த நிகழ்ச்சில் பேசியபோது இந்தியவில் பல திட்டங்கள் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் அதைப் பற்றிய தகவல் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியிட போக உள்ளதாகும் கூறினார். குறிப்பாக வரும் சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வரும் அனைத்து கட்சிகளுகும் அவரது வாழ்த்துக்களை கூறினார். மேலும் அவர் இதைக்குறித்து பேசிய போது இந்தியாவில் அடுத்த திட்டமான ரிமோட் வோட்டிங் முறை குறித்த திட்டம் தயாராகி வருவதாக கூறினார்.
இது தொடர்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சென்னை ஐ.ஐ.டி மற்றும் மற்ற சிறந்த ஐ.ஐ.டி கல்விநிறுவனங்களின் தொழிற்நுட்ப வல்லுனர்களுடன் சேர்ந்து ஆலோசனை செய்யப்பட்ட பிறகே இந்த ரிமோட் வோட்டிங் முறை திட்டம் தொடங்கியது என்று கூறினார். இந்த ரிமோட் வோட்டிங் திட்டதை வடிவமைக்க பல குழுக்கள் கடுமையாக உழைத்து வருகின்றது என்றும் கூறினார். இந்த ரிமோட் வோட்டிங் முறை 2024 மக்களவைத் தேர்தலுக்குள் பயன்பாட்டிற்க்கு வரலாம் என நம்பப்படுகிறது மற்றும் சுனில் அரோரா வாக்களர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையையும் இணைதல் பட்றியும் கூறினார்.