ட்விட்டரில் டிரெண்டாகும் ‘#கைப்புள்ள_ஸ்டாலின்’ ஸ்டாலினை அசிங்கபடுத்திய நாம் தமிழர் கட்சியினர்

Photo of author

By Ammasi Manickam

சமூக வலைதளமான ட்விட்டரில் ஒவ்வொரு அரசியல் கட்சி தொண்டர்களும் தங்கள் கட்சி தலைவர்களை ஆதரித்தும்,எதிர் தரப்பினரை விமர்சித்தும் டிரெண்ட் செய்வது வழக்கமானது. இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்து #கைப்புள்ள_ஸ்டாலின் என்ற ஹேஸ் டேக் டிரெண்டாகி வருகிறது.இதை நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் முன்னெடுக்க அதிமுக,பாமக மற்றும் பாஜக என திமுகவின் எதிர்தரப்பினர் இணைந்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இணையதள ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், விடுதலை புலிகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டார். அந்த சமயம், சீமான் குறித்து தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் விமர்சித்து பேசியது குறித்து நெறியாளர் சீமானிடம் கூறி கருத்து கேட்டார்.

அதாவது, ” எனக்கு மன உளைச்சல் ஏற்படும் போது எல்லாம் நான் சீமானின் பேச்சைக் கேட்பேன். அவரது பேச்சு வடிவேலு பேசுவதை போல இருக்கும் என திமுக எம்பி செந்தில்குமார் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியது குறித்து நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என சீமானிடம் அந்த நெறியாளர் கேள்வி எழுப்பினர்.

அப்போது நெறியாளரின் கேள்விக்கு பதிலளித்த சீமான், “என் பேச்சே நகைச்சுவையாக இருக்கிறது என்றால், ஸ்டாலினின் பேச்சை என்ன சொல்வது. சட்டியில் இருந்தால்தான் அகப்பைக்கு வரும் என்பதையே சட்டையில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என கூறுபவர் தான் ஸ்டாலின்,” என திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சிக்கும் விதமாக நெறியாளரின் பேச்சுக்கு சீமான் பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில், சீமானை விமர்சனம் செய்த திமுகவினரை விமர்சிக்கும் விதமாக, நாம் தமிழர் கட்சியினர் திமுக தலைவரை கலாய்த்து #கைப்புள்ள_ஸ்டாலின், #ஜோக்கர்_ஸ்டாலின் மற்றும் #கோமாளி_ஸ்டாலின் என்னும் ஹேஸ்டேக்கை பயன்படுத்தி ட்விட்டரில் டிரெண்டாக்கியுள்ளனர். மேலும், திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்து பல்வேறு மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

https://twitter.com/tamil_thesiyam/status/1265174916355092482

அதேபோல, திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்து பதிவிட்ட நாம் தமிழர் கட்சியினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘#இட்லி கறி சீமான்’ என்னும் ஹேஸ்டேக்கை திமுகவினர் டிரெண்ட்டாக்கியுள்ளனர்.

https://twitter.com/KkAssassins/status/1265247085734932481

எது எப்படியோ விமர்சனம் என்ற பெயரில் எதிர்க்கட்சி தலைவர் என்றும் பார்க்காமல் திமுக தலைவர் ஸ்டாலினை சமூக வலைதளங்களில் கடுமையாக அசிங்கப்படுத்தி விட்டனர்.