ஜெயிச்சா மாலை!.. இல்லன்னா பாடை!.. நிர்வாகிகளுக்கு சீமான் எச்சரிக்கை!…

0
19
seeman

சினிமா இயக்குனராக இருந்து அரசியலுக்கு வந்தவர் சீமான். நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கினார். அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டிகொள்பவர் சீமான்.

அநேரம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களில் வெளியேறிவிட்டனர். ஒருபக்கம், நடிகை விஜயலட்சுமி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டும் சீமானின் மீது இருக்கிறது. ஆனால், அதற்கெல்லாம் பெரிதாக சீமான் விளக்கம் கொடுப்பது இல்லை. இவர் மீது பல அவதூறு வழக்குகளும் இருக்கிறது. அடிக்கடி நீதிமன்றமும் செல்வார்.

விஜய் கட்சி துவங்கியவுடன் அவருடன் இணைந்து செயல்படுவது போல காட்டிக்கொண்டார். ஆனால், விஜய் திராவிடத்தை ஏற்பதாக சொன்னதும் கடுப்பாகி அவரை திட்ட துவங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை போட துவங்கிவிட்டார்கள். இதில் முதலாவதாக அதிமுக – பாஜக கூட்டணி உருவாகிவிட்டது. திமுகவை தோற்கடிக்க வேண்டும் என ஆசைப்படும் விஜய் அதிமுக கூட்டணியில் இணைவரா என்பதும் தெரியவில்லை. அதேபோல், வழக்கம்போல் சீமான் யாருடணும் சேராமல் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவார் எனத்தெரிகிறது. பாஜகவிலிருந்து அழைப்பு வந்தும் சீமான் அதை நிராகரித்துவிட்டார்.

‘2026 சட்டமன்ற தேர்தலில் நான் சொல்பவர்கள்தான் வேட்பாளர்கள். நான் சொல்வதையும் மீறி தேர்தலில் போட்டியிட்டால் அவர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி விஜயின் கட்சிக்கு சென்றுவிடுங்கள். விஜய் கட்சிக்கு செல்வதாக இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்.. நானே சேர்த்துவிடுகிறேன்’ என பேசியிருக்கிறார்.

மேலும், ‘2026 சட்டமன்ற தேர்தலில் வெல்பவர்களை பல்லக்கில் ஏற்றி மாலை போட்டு அழைத்து வருவேன். தேர்தலில் தோற்பவர்களை பாடையில் ஏற்றி மாலை போட்டு அனுப்பி வைப்பேன். எப்படி இருந்தாலும் மாலை உறுதி. தோற்றால் கொஞ்சம் பால்டாயிலை குடித்துவிட்டு நீங்களே பாடையில் படுத்துவிடுங்கள்’ என பேசியிருக்கிறார்.

Previous article12 மாணவர்களின் கவனத்திற்கு!! தொழிலாளர் மேலாண்மை படிப்புக்காக தமிழக அரசு அழைப்பு!!
Next articleசிறப்பான தரமான சம்பவமெல்லாம் இனி பார்ப்பீங்கடா!. ரெட்ரோ பட டிரெய்லர் வீடியோ!..