அணுமின் நிலைய வேலைவாய்ப்பு: 13 காலிப்பணியிடங்கள்.. MBBS மற்றும் NURSING படித்தவர்கள் விண்ணப்பிங்க!
சென்னை கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தின் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள மருத்துவர்,செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு வெளியாகி இருக்கிறது.இந்த பணிகளுக்கு விண்ணப்பம் விண்ணப்பதாரர்கள் தற்காலிக அடிப்படையில் பணியரமர்த்த பட உள்ளனனர்.
வேலை வகை: அரசு வேலை
நிறுவனம்: கல்பாக்கம் அணுமின் நிலையம்
பணி:
1)General Duty Medical Officer
2)Nurse
காலியிடங்களின் எண்ணிக்கை:
General Duty Medical Officer – 07
Nurse – 06
கல்வி தகுதி:
General Duty Medical Officer பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் MBBS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Nurse பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் DGNM or B.Sc (Nursing) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 50 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
மாத ஊதியம்:
General Duty Medical Officer பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.1,06,380 ஊதியம் வழங்கப்பட உள்ளது.
Nurse பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.70,050 ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிகளுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: நேரடி முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய தகுதி,ஆர்வம் இருக்கும் நபர்கள் https://www.igcar.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு தேவையான ஆவணங்களுடன் ஜூன் 11 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்ற நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் முகவரி: [email protected]
கூடுதல் விவரங்களுக்கு: https://www.igcar.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.