செவிலியர்களே இது உங்களுக்கு தான்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!
கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிlலும் நாம் வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம்.முதல் அலையில் அதன் வீரியம் அதிகளவு காணப்படவில்லை.இரண்டாம் அலையில் முன்னேற்பாடுகள் இன்றி இருந்ததால் அதன் தாக்கம் அதிகளவு காணப்பட்டது.அதனையும் கடந்து தற்பொழுது நாம் அனைவரும் மூன்றாவது அலைக்கு தயார் நிலையில் உள்ளோம்.அந்தவகையில் மூன்றாவது அலையிலிருந்து தங்களை காத்துக்கொள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மக்கள் தடுப்பூசி செலுத்த தவறக்கூடாது என்பதற்காக வாரம்தோறும் விடுமுறை நாளான ஞாயிற்று கிழமை அன்று மெகா தடுப்பூசி முகாம் என்ற ஒன்றை அமைத்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.அவ்வாறு வாரம் தோறும் செலுத்தும் தடுப்பூசிகளில் மக்கள் எத்தனை சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர் என்பதை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறுவார்.அவ்வாறு,சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நிறுவியுள்ள டெங்கு சிறப்பு சிகிச்சை பிரிவை பார்வையிட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,அமைச்சர் பாபு மற்றும் சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் ஆகியோர் சென்றனர்.அப்போது அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து மா.சுப்பிரமணியம் பேட்டி ஒன்றை அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது,தமிழ்நாட்டில் இதுவரை 64% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.அதேபோல 25% பேருக்கு இரண்டாம் தடுப்பூசி செலுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.இந்த தடுப்பூசி முகாம்களில் மக்களுக்கு சிறப்புடன் தடுப்பூசி செலுத்தியதில் செயல்பட்டதாக செவிலியர்களை பாராட்டினார்.அதனால் அவர்களுக்கு விருப்பமான நாட்களில் வார விடுமுறையை வழங்குமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறினார்.அதுமட்டுமின்றி மக்களை தேடி மருத்துவம் என்ற ஒன்றை முதல்வர் தொடங்கினார்.அதற்கு செவிலியர்களை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை நடந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.மக்களை தேடி மருத்துவம் அல்லது வேறு பணிகளில் செவிலியர்களை ஈடுபடுத்துவது குறித்து ஆலோசனை நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.