ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்கள் போராட்டம்!!

0
193
#image_title

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொகுப்பூதியை செவிலியர்களாக சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு சரியான தேதியில் சம்பளம் வழங்கவில்லை எனக் கூறியும், நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க கோரிய இபிஎஃப் பணத்தை கடந்த 10 மாதங்களாக இவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கவில்லை என வலியுறுத்தி தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு பணி புறக்கணிப்பு செய்து 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து பேசிய செவிலியர் தீபலட்சுமி கடந்த 2015 முதல் தொகுப்பூதிய செவிலியர்களாக பணியாற்றி வருவதாகவும் மாத மாதம் வழங்க வேண்டிய சம்பளத் தொகையை 10 முதல் 15 ஆம் தேதி வரை இழுத்தடிப்பதாகவும் அரசு அறிவித்த ஐந்து சதவீத ஊதிய உயர்வை இதுவரை மாவட்ட நிர்வாகம் வழங்கவில்லை மத்த மாவட்டங்களில் ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து சலுகைகள் வழங்கி வருவதாகவும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் வழங்க மறுப்பதாக தெரிவித்தார்.

செவிலியர்களின் இந்த பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருவதால் வரக்கூடிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Previous articleபஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு தமிழக தமிழர்கள் பலி!
Next articleஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் கைதான பாதிரியார்!! மேலும் ஒரு செல்போன் பறிமுதல்!!