கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்ப உள்ளார் ஓ. பன்னீர்செல்வம்!!

கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்ப உள்ளார் ஓ. பன்னீர்செல்வம்!!

அதிமுக தலைமையில் கடந்த 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால் அதிமுக அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்நிலையில் சீலை அகற்ற இருதரப்பும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதற்கிடையே சில நாட்களில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.கொரோனா பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடந்த நான்கு நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ள நிலையில்  கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஓபிஎஸ் கவசம் பொருந்திய உடையை  அணிந்து வாக்களித்தார்.

இந்நிலையில் பூரண குணமடைந்து மருத்துவமனையிலிருந்து  ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை வீடு திரும்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் டாக்டர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.இப்போது அவரும் முழு குணமடைந்து சென்ற வாரம் வீடு திரும்பி இருக்கிறார்..

Leave a Comment