அமித்ஷாவுக்காக விடிய விடிய காத்திருந்த ஓபிஎஸ்!.. ஹோட்டல்ல ரூம் போட்டது வீணாப் போச்சே!…

Photo of author

By அசோக்

அமித்ஷாவுக்காக விடிய விடிய காத்திருந்த ஓபிஎஸ்!.. ஹோட்டல்ல ரூம் போட்டது வீணாப் போச்சே!…

அசோக்

ops

கிட்டத்தட்ட அரசியல் அநாதை ஆகிவிட்டார் ஓபிஎஸ். அதிமுக ஆட்சியின் போது மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். சசிகலாவுடன் மோதல், ஜெ.சமாதியில் தியானம், பரப்பு பேட்டி, ஜெ.வின் மரணத்திற்காக தர்ம யுத்தம், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எனக்குதான் என நீதிமன்றம் போனது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர்.

ஓபிஎஸ்-ஐ பழனிச்சாமியுன் சேர்த்து பாஜகவுடன் கூட்டணி போட வைக்க வேண்டும் பாஜக மேலிடம் விரும்பியது. அமித்ஷா எடுத்த முயற்சியில் பழனிச்சாமியோடு ஓபிஎஸ் இணைந்து அதிமுகவில் இரட்டை தலைமை உருவானது. ஆனாலும் ஒரு கட்டத்தில் ஒபிஎஸ் நடந்துகொண்டது பிடிக்காமல் அவரை கட்சியிலிருந்து தூக்கிவிட்டு ஆட்சி, கட்சி ஆகிய இரண்டையும் தனது தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் பழனிச்சாமி.

எனவே, தனித்து விடப்பட்டார் ஓபிஎஸ். அதன்பின் கடந்த சட்டமன்ற தேர்தலில் இராமநாத புரத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு அதிமுக தோற்க காரணமாக இருந்தார். அதன்பின் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால், ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் அதிமுகவில் விட பழனிச்சாமிக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை.

ops

ஒருபக்கம், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை ஒருங்கிணைத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்தித்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என அமித்ஷா நினைக்கிறார். பழனிச்சாமியிடம் கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இன்று சென்னையில் இருக்கிறார் அமித்ஷா.

எனவே, சென்னை வந்திருக்கும் அமித்ஷாவை எப்படியாவது சந்திக்க முயற்சிகளை எடுத்து வருகிறார் ஓபிஎஸ். அமித்ஷா தங்கியுள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் அமித்ஷா வருவதற்கு முன்னதாகவே ரூம் புக் செய்து அமித்ஷா அழைப்பார் என காத்திருந்தாராம். ஆனால், நேற்று இரவு முழுவதும் ஓபிஎஸ்-ஐ அமித்ஷா அழைக்கவே இல்லை என்கிறார்கள். எனவே, பிஜேபி தமிழக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் மூலம் குருமூர்த்தி வீட்டுக்கு அமித்ஷா வரும்போது அவரை சந்திக்க ஓபிஎஸ் முயற்சி செய்து வருகிறார் என்கிறார்கள். அமித்ஷா மூலம் பழனிச்சாமியிடம் பேசி மீண்டும் அதிமுகவில் இணைந்து கொள்ள வேண்டும் என்பதே பன்னீர் செல்வத்தின் நோக்கம் என சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.