இளநிலை மருத்துவ படிப்பிற்பு நீட் தேர்வு இருப்பது போலவே முதுநிலை மருத்துவ படிப்பிற்கும் நீட் தேர்வு உள்ளது. நீட் இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு போதிய இடம் கிடைப்பதில்லை. இதுவரை பலாயிரம் மருத்துவ இடங்களை இவர்கள் இழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படுவதில்லை என்று சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் முதுநிலை மருத்துவ நீட் தேர்வில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு அளிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையின் கீழ் வராது என்று மனுவை திரும்ப பெறுமாறு கூறியது. மேலும் மாநில அரசின் கொள்கை அடிப்படையில் தமிழகம் தொடர்பான இட ஒதுக்கீட்டிற்கு உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் ஓபிசி பிரிவினருக்கான 50% இட ஒதுக்கீட்டை மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசியல்கட்சிகள் மனு தாக்கல் செய்தனர். மருத்துவ இடஒதுக்கீடு குறித்து உத்திரபிரதேச பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த பின்னர் தமிழக அரசின் மனுவை விசாரிக்க வேண்டும் என்று கூறினர். இதற்கு, அந்த பெண் தொடர்ந்த வழக்கு உத்திரபிரதேச மாநிலத்தின் உரிமை தமிழகத்திற்கு தொடர்பு இல்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவித்தனர். இந்த இன்றைய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக அரசின் ஓபிசி பிரிவினருக்கான 50% மருத்துவ இட ஒதுக்கீடு வழக்கை விரைந்து விசாரிக்குமாறு உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவு பற்றி விரைவில் முடிவு வெளியாக வாய்ப்புள்ளது.