மருத்துவ படிப்பிற்கான ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

Photo of author

By Parthipan K

ஒபிசி இட ஒதுக்கீட்டின் படி மருத்துவ படிப்பில் சேர்வதற்கான வழக்கில் தீர்ப்பு கிடைத்தது சமூகநீதிக்கான மிகப்பெரிய வெற்றி என திமுக வழக்கறிஞரும்,
 மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ஓபிசி இட ஒதுக்கீட்டின் படி, ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது சமூக நீதிக்கான வெற்றி எனவும் இந்த வெற்றியில் தமிழகம் முன்னுதாரணமாக திகழ்ந்து உள்ளது எனவும் தெரிவித்தார்.
ஆளுங்கட்சி, திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள், என அனைவரும் இணைந்து தொடுக்கப்பட்ட வழக்கில் வெற்றி கிடைத்துள்ளது.
இந்தத் தீர்ப்பானது, “மூன்று நபர் கமிட்டி ஆக அமைக்கப்பட வேண்டும். அது மருத்துவக் கவுன்சில் செயலாளர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர்கள் கொண்ட மூன்று நபர் கமிட்டி அமைக்க வேண்டும். இந்த கமிட்டி இட ஒதிக்கீடு கொடுப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து மூன்று மாதத்திற்குள் முடிவு எடுக்க வேண்டுமென அந்தத் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுமைக்கும் ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு உண்டு எனவும், அதை மத்திய அரசு கொடுப்பதில் தடை எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. மேலும், அது சட்ட ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ தடையேதும் இல்லை என அந்தத் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
எதிர்த்தரப்பில் வைத்த மத்திய அரசின் வாதத்தையும், மருத்துவ கவுன்சிலின் வாதத்தையும் நீதிபதிகள் நிராகரித்தனர். மேலும், இந்த உத்தரவை அடுத்த கல்வியாண்டில் ஓபிசி இட ஒதுக்கீடு முறையை கொண்டு வர வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.