பெரியகுளத்தில் அதிமுக நிர்வாகி செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ்!

Photo of author

By Sakthi

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடங்கள் சிறை தண்டனையை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வந்தார் .தற்சமயம் அவர் தண்டனை காலம் முடிவுற்ற நிலையில், சசிகலா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அதன்பிறகு அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த காரணத்தால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அதன்பிறகு தொற்றிலிருந்து குணமாகி தற்சமயம் பெங்களூருவில் ஓய்வில் இருந்து வருகிறார்.

சசிகலா விடுதலையானதிலிருந்தே தமிழக அரசியல் பரபரப்பாகி இருக்கிறது. அதேசமயம் அதிமுகவை சார்ந்த பல நிர்வாகிகளும் சசிகலாவை வரவேற்று சுவரொட்டிகளை ஒட்டி கொண்டாடி வருகிறார்கள். அப்படி செய்பவர்கள் மீது அதிமுகவின் தலைமை நடவடிக்கையும் எடுத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரிய குளத்திலேயே ஆளும் தரப்பை சேர்ந்தவர்கள் சசிகலாவை வரவேற்கும் விதமாக சுவரொட்டிகளை போட்டிருக்கிறார்கள் இதுபோன்ற தேனிமாவட்டம் முழுவதிலுமே ஒட்டப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களையும், தமிழக அரசியல்வாதிகளையும், திகைப்படைய செய்திருக்கிறது .அதேசமயம் சசிகலா எப்பொழுது வெளியே வருவார் என்று எதிர்பார்த்திருந்த பலரையும் இப்பொழுது அடையாளம் கண்டு வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ஏனென்றால் சசிகலா வெளியே வரும்வரை நாம் சசிகலா அணிக்கு சென்றால் அங்கே நமக்குப் பாதுகாப்பும் அதிகாரமும் கிடைக்காது என்று இதுவரையில் அதிமுகவில் இருந்துவிட்டு, தற்போது சசிகலா வெளிவந்தவுடன் அவரை நாடிச் சென்று கொண்டு இருக்கிறார்கள் பல நிர்வாகிகள் என்றும் சொல்லப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் அதிமுகவில் நாம் நீடித்திருந்தால் இபொழுது ஆளும் கட்சியாக இருக்கும் காரணத்தால், தமிழகத்தில் அதிகாரத்தை உபயோகப்படுத்தலாம் என்பதும் அவர்களின் கணக்காக இருந்ததாக சொல்கிறார்கள். அதேசமயம் தற்போது சட்டசபைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அடுத்த முறை அதிமுக ஆட்சிக்கு வருமா அல்லது வராதா என்ற சந்தேகம் இருக்கும் காரணத்தால், இனி இந்த கட்சியில் இருந்தாலும் ஒன்று இல்லை என்றாலும் இன்று என்ற மனநிலையில் பலர் இருப்பதாக சொல்கிறார்கள் அதேபோலவே அதிமுகவை சேர்ந்த பல நிர்வாகிகளும் சசிகலாவை வரவேற்கும் விதமாக போஸ்டர்களை ஒட்டி வருகிறார்கள்.