அரசு மருத்துவமனை மருத்துவரின் மீது ஆவேசம்: வேலூர் மருத்துவமனைகளில் ஆய்வு!

Photo of author

By Parthipan K

அரசு மருத்துவமனை மருத்துவரின் மீது ஆவேசம்: வேலூர் மருத்துவமனைகளில் ஆய்வு!

Parthipan K

Updated on:

அரசு மருத்துவமனை மருத்துவரின் மீது ஆவேசம்: வேலூர்  மருத்துவமனைகளில் ஆய்வு! 

வேலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை திட்ட பணிகளை தொடக்கி வைப்பதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன், மூத்த அமைச்சரான துரைமுருகன் அவர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில், அமைச்சர்கள் இருவரும் 10 அரசு மருத்துவமனைகளில் நேற்று ஆய்வு நடத்தினார்.

பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு நடத்திய போது அங்கு இருந்த பொதுமக்கள் அமைச்சர் துறைமுருகனிடம் புகார்களை முன் வைத்தனர். முதியவர் ஒருவர், இங்கு மருத்துவர்கள் மக்களை அலைக்கழிப்பதாகவும், முறையான பதில்களையும் கூறுவதில்லை எனவும், மற்றொருவர் இங்கு இரவு நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்க கூட மருத்துவர்கள் இருப்பதில்லை எனவும் கூறியுள்ளனர்.

மேலும் புகார்கள் குறித்து அங்கு இருந்த பெண் மருத்துவரிடம் விளக்கம் கேட்டார். அவர்களின் பதில் முரண்பானதாக இருந்தது, இதனால் கோபமடைந்த அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இவங்கள முதல்ல சஸ்பெண்ட் பண்ணுங்க சார் என்று ஆக்ரோஷமானார். உள்ளூர்காரர்களை அரசு மருத்துவமனைகளில் மருத்துவராக நியமிக்க வேண்டாம் என்றும், அவர்கள் ஆறு மணி ஆனால் போதும் வீட்டுக்கு பெட்டியை கட்டி விடுகிறார்கள் எனவும் துரைமுருகன் அவர்கள் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இரவு பணி பார்க்க வேண்டிய மருத்துவரை மருத்துவமனைக்கு வரவழைத்து எல்லார் முன்னிலையிலும் கேள்விகளை கேட்டார். துரைமுருகன் அவர்கள் இவ்வளவு கோபம் அடைவாரா? என்பதை எதிர்பார்க்காத மருத்துவர்களும், அமைச்சர் சுப்பிரமணியனும் திகைத்தனர். மேலும் எனக்கு இதைப் பார்த்தால் மருத்துவமனை போன்றே தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.

அண்மையில் காட்பாடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர்களை புகாருக்கு உள்ளனதால் பணி நீக்கம் செய்ய வைத்தார். இப்போது அவரின் பார்வை அரசு மருத்துவமனைகளின் மீது உள்ளது.