கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி! தூத்துக்குடி அருகே பரபரப்பு!

Photo of author

By Sakthi

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி! தூத்துக்குடி அருகே பரபரப்பு!

Sakthi

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பேரூரணி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கருப்புசாமி, கனகலட்சுமி இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். குடிபோதைக்கு அடிமையான கருப்புசாமி மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், கடந்த 7ஆம் தேதி கருப்பசாமி வீட்டுக்கு வெளியே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக தட்டாப்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையின்போது கனகலட்சுமி மீது சந்தேகம் எழுந்ததன் காரணமாக, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில் உறவினரான சோழபுரத்தை சேர்ந்த ஓட்டுனர் ரவிச்சந்திரனுடன் கள்ளத்தனமாக பழகிக்கொண்டிருக்கிறார் என்பது தெரியவந்தது. இதனை கண்டித்து கருப்பசாமி மனைவியை சித்திரவதை செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே கடந்த 7ஆம் தேதி வீட்டிற்கு வந்த கருப்புசாமி வீட்டின் வெளியே தூங்குவதை கனகலட்சுமி ரவிச்சந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அன்றிரவு பேரூரணிக்கு வருகை தந்த ரவிச்சந்திரன் கருப்புசாமியை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்று விட்டார் என்று சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டார், இந்த கொலைக்கு உறுதுணையாக இருந்த கருப்பசாமி என் மனைவி தனலட்சுமியை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.