இந்தியாவில் ஒரே நாளில் 63,371 பேருக்கு பாதிப்பு! அக். 16 கொரோனா பாதிப்பு நிலவரம்!

0
148

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 63,371 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73,70,469 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 895 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,12,161 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 70,338 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 64,53,780 ஆக உயர்ந்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 87.56% பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்றைய தேதியில் 8,04,528 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் ஒரே நாளில் 10,28,622 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதுவரை 9,22,54,927 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleTNPSC எழுத்து தேர்வில் புதிய மாற்றம்:! தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!
Next articleசீனாவை எச்சரித்த இந்திய அமைச்சர்! லடாக்கில் நீடிக்கும் பதற்றம்!