இந்தியாவில் ஒரே நாளில் 62,212 பேருக்கு பாதிப்பு! அக். 17 கொரோனா பாதிப்பு நிலவரம்!

0
155

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 62,212 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,32,681 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 837 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,12,998 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 70,816 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 65,24,595 ஆக உயர்ந்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 87.78% பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்றைய தேதியில் 7,95,087 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் ஒரே நாளில் 9,99,090 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதுவரை 9,32,54,017 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleநீட் தேர்வில் முதல் முறையாக முழு மதிப்பெண்கள் பெற்று சாதனை!
Next articleமருத்துவர் ராமதாசின் கோரிக்கையை ஏற்ற விஜய் சேதுபதி! சர்ச்சைக்குரிய படத்திலிருந்து விலக அறிவிப்பு! தமிழ் ஆர்வலர்கள் பாராட்டு