இந்தியாவில் ஒரே நாளில் 61,871 பேருக்கு பாதிப்பு! அக். 18 கொரோனா பாதிப்பு நிலவரம்!

0
159

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 61,871 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,94,551 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,033 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,14,031 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 72,614 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 65,97,209 ஆக உயர்ந்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 88.03% பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்றைய தேதியில் 7,83,311 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் ஒரே நாளில் 9,70,173 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதுவரை 9,42,24,190 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleபுரட்டாசி மாதம் நிறைவு! இறைச்சி கடைகளில் அலைமோதும் கூட்டம்!
Next articleஅடேங்கப்பா!!  மாதுளை இலைக்கு இவ்வளவு மருத்துவ பயன்களா?