தமிழகத்தில் 6.90 லட்சம் பேர் பாதிப்பு! அக். 19 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

0
133

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 3,536 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,90,936 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 49 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10,691 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 4,515 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பினோர்களின் மொத்த எண்ணிக்கை 6,42,152 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய தேதியில் 38,093 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 85,130 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இதுவரை மொத்தம் 90,31,696 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று மட்டும் 885 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,90,936 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக இன்று மட்டும் 16 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 3,536 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போதைய நிலையில் அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 126 என மொத்தம் 192 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

Previous articleபஞ்சாப் மற்றும் உத்திரபிரதேசத்தில் பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் வருகை!
Next articleவிஷம் கலந்த மதுவை குடித்த மக்கள் …..! அதிரடி விசாரணையில் இறங்கிய மதுவிலக்குத்துறையினர்…..!