State

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3094 பேருக்கு பாதிப்பு! அக். 20 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 3,094 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,94,030 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 50 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10,741 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 4,403 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பினோர்களின் மொத்த எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய தேதியில் 36,734 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 85,371 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இதுவரை மொத்தம் 91,12,067 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று மட்டும் 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,91,754 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக இன்று மட்டும் 11 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 3,546 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போதைய நிலையில் அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 128 என மொத்தம் 194 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

குரங்கை வைத்து ஆழம் பார்த்த திமுக.! உஷாரான கூட்டணி கட்சிகள்..!

இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி!

Leave a Comment