இந்தியாவில் ஒரே நாளில் 54,044 பேருக்கு பாதிப்பு! அக். 21 கொரோனா பாதிப்பு நிலவரம்!

0
131

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 54,044 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,51,108 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 717 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,15,914 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 61,775 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 67,95,103 ஆக உயர்ந்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 88.81% பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்றைய தேதியில் 7,40,090 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் ஒரே நாளில் 10,83,608 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதுவரை 9,72,00,379 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleஉயர்த்து வரும் வெங்காயத்தின் விலையை குறைக்க தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை…! நிம்மதியடைந்த மக்கள்…!
Next articleகொங்கு மண்டலத்தை மொத்தமாக வளைக்க ஸ்டாலின் போட்ட செம திட்டம்…! என்ன செய்யப்போகிறது அதிமுக…!